புதிய ஏர்பேக் மற்றும் இத்யாதிகளுடன் ஸ்கார்பியோ இந்தியாவின் பெரிய கார்கள் தயாரிப்பாளரான மஹிந்திரா மோட்டார்ஸ், அதன் புகழ்பெற்ற தயாரிப்பான ஸ்கார்பியோவின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வண்டியில் முன்புறம் இரண்டு காற்று பைகள், ப்ளூடூத் மற்றும் இதர புதிய ஐட்டங்களுடன் வெளிவந்துள்ளது. மஹிந்திரா Body Function Module டிரைவர் சீட்டுக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பானெட்டைத் திறக்காமலே என்ன பிரச்சினை என்று ஆராயலாம். சர்வீஸ் ஸ்டேஷன் ஆசாமிகளும் எளிதில் பிரச்சினையைக் கண்டறிய உதவும். ஸ்பீடு அலர்ட் எச்சரிக்கை [...]