இன்று டெல்லியில் நடந்த விழாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் கிளாஸிக் 500 EFI மற்றும் கிளாஸிக் 350 ரக புதிய மோட்டார் சைக்கிள்கள் வெளிடப்பட்டன. இரண்டு வாரமாகவே அனைத்து வாகன சஞ்சிகைகளிலும் இதன் பேச்சாகவே இருக்கிறது. 500 EFI மாடலில் fuel injection நுட்பம் பயன்படுத்தி உள்ளார்கள். இந்தியாவிற்குப் புதுசாம். இந்தியாவில் fuel injection உடன் வெளியாகும் முதல் என்பீல்டு பைக் இது. அத்துடன் 5250 RPMல் 27 BFP சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கது என்று [...]