முன்பெல்லாம் காசி யாத்திரை செல்வோரைத் தான், குடும்பத்தோடு ரோட்டுக்கு வந்து, கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்புவது வழக்கம். யாத்திரை செல்பவர் திரும்ப வருவாரா? மாட்டாரா? என்ற நிச்சயமற்ற தன்மையே அதற்கு காரணம். இப்போது, ரோட்டில் இறங்கினாலே போதும்; காசி யாத்திரை போன மாதிரி தான்; உயிரோடு திரும்புவதற்கான உத்தரவாதம் கிடையாது. இந்தியா முழுவதும், ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எய்ட்ஸ் உள்ளிட்ட, உலகின் எந்தக் கொடிய நோய்க்கும் இவ்வளவு பெரிய [...]