முன்பெல்லாம் செய்திகளில் சிலசமயங்களில் சாலை விபத்துகள் பற்றிப் படிப்போம் அல்லது கேட்போம். இப்போது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற செய்தியின் தொனியே தனி. “”தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் பலி. 40 பேர் காயம்…” இந்த ரீதியில்தான் விபத்துகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. விபத்துகளில் ஓரிருவர்தான் பலி என்றால் அது ஒரு செய்தியாகவே எடுபடுவதில்லை. நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களும், கார்களும், மூளியாகிப்போன பேருந்துகளும், உடல் சிதறிய மனித உருவங்களும், ரத்தக்குளங்களும் [...]