Volkswagen தனது ஸ்போர்ட்ஸ் ரக கார் Touareg ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. SUV போட்டியில் இந்த கார் தங்களது பங்களிப்பாக இருக்கும் என்று இந்த நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்தியாவில் SUV ரக வண்டிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. அதனால் ஏனைய நாடுகளில் பிரசித்தி பெற்ற Touareg இந்திய சந்தையில் தங்களது நிலையை சீராக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர்.

Volkswagen Touareg
Touareg காடு மலை என்று எந்த ஒரு இடததிற்கும் ஏற்ற 4×4 வண்டி. பனை மர அளவிற்கு உயரம் கொண்ட இந்த வண்டியில் சக்தி வாய்ந்த 3 லிட்டர் V6 TDI (டீசல்) எஞ்சின் உள்ளது. அத்தோடு 6 ஸ்பீடு Direct Shift – DSG டிரான்ஸ்மிஷன். 7.8 மணித்துளிகளில் 0லிருந்து 100 கிமீ வேகத்திற்கு பேய் மாதிரி பறக்குமாம் இந்த வண்டி. (240HP at 4000-4400 rpm
)
45° ஏற்றம் கொண்ட மலைப் பாதையில் ஏறமுடியும்
35° பக்கவாட்டு சரிவுப் பாதையில் இறங்க முடியும்
பாதுகாப்பிற்காக 8 காற்றுப் பைகள்
மின்னியக்க சன்ரூஃப் (கார் ஓட்டிக்கிட்டே பிராக் பார்க்க!)
மின்னியக்க 12 வழி நகர்த்தக்கூடிய இருக்கைகள் சொகுசுக்காக
ஓட்டுநர் இருக்கைக்கு என நிர்ணயிக்கக்கூடிய நினைவக வசதி (programmable memory)
மின்னியக்க பின்புலக் கண்ணாடி
விலை 51.85 லகரங்கள் (டெல்லிப் பக்கம்)
Pingback: Volkswagen Beetle And Touareg Launched « மோட்டார் சுந்தரம் பிள்ளை