Volkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle   1 comment

Volkswagenஇடம் இருந்து அடுத்த அறிவிப்பு. தன் புதிய Beetle காரை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தினார்கள்.

உலகின் மற்ற நாடுகளில் பல வருடங்களாக பரவலாக நன் மதிப்பு Beetleகாரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வதாக நிறுவனத்தார் கூறியுள்ளனர்!

Beetle

Beetle

Volkswagen நிறுவனத்தில் பெறுமை பெற்ற முதல் கார் இந்த Beetle. மூட்டைப்பூச்சி மாதிரி (சும்மா டமாஸுக்கு) தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை எல்லாம் சேர்ந்து Volkswagenன் பெருமைக்கு வழிதேடித் தந்தது. உலகத்தின் பல இடங்களிலும் இந்த கார் வெகு சிறப்பாக விற்றுத்தீர்த்தது. தற்போது தன் பெருமையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துகிறது Volkswagen.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்திய சந்தை ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும். அத்தோடு இந்திய வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளின் நவீன நிபுணத்துவத்தை அறிமுகப்படுத்த நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம் என்று தெரிவிக்கவும் எங்களது சிறந்த படைப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். (அள்ளிவிடுங்க!)

Beetle கார் ஜெர்மன் பொறியியல் திறனோடு 2 லி கொள்ளளவுடைய 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது (115HP at 5400 rpm).  அத்தோடு 6 டிரான்ஸ்மிஷன்.
பாதுகாப்பிற்கென 4 காற்றுப் பைகள், AntiLock Braking System – ABS, Electronic Stabilization Program – ESP மற்றும்  immobiliser (சாவியை உருவிட்டு ஒயர முடுக்கிவிட்டாலும் எஞ்சின் இயங்காது)
6 சிடி சேஞ்சர்
பவர் ஸ்டியரிங்
வெப்பத்தைத் தடுக்கும் கோட்டிங் கிளாஸ்
15″ அலாய் வீல்
BS4
விலை 20.45 லகரம்

Advertisement

Posted December 5, 2009 by Pandian in volkswagen

Tagged with , , , ,

One response to Volkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle

Subscribe to comments with RSS.

  1. Pingback: Volkswagen Beetle And Touareg Launched « மோட்டார் சுந்தரம் பிள்ளை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.