
maruti 800
சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும்.
YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகிறது. மக்கள் கண்ணைக் கவர்ந்தது என்றால் மாருதியின் தயாரிப்புக் கூடம் பிசியாகிவிடும். BS4 கட்டுப்பாட்டுடன் அடுத்த வருடம் இந்தியாவின் 11 நகரங்களில் YE3 அறிமுகப்படுத்தப்படும் என்று மாருதியின் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகன்ஷி தெரிவித்திருக்கிறார்.
Wagon R மாடலிலும் YR9 என்ற புதிய தலைமுறை கார்கள் வருவதாகச் சொல்கிறார்கள், அதும் புது எஞ்சினோட!
தீ பறக்கட்டும்! கார்பன் குறையட்டும்.
why no posts ?
Sorry, I dont have access to a machine right now. been busy too
will be back
உங்கள் வலைப்பூ சுவாரசியமாக உள்ளது. உங்கள் பயணம் பற்றி மேலும் பேச விரும்புகிறேன். மின் அஞ்சல் முகவரி aforamma@gmail.com
Thanks Thamizhan. You are always welcome. barathee [at] gmail [dot] com